சரிந்து வரும் நீலகிரி தைல உற்பத்தி தொழிலை மேம்படுத்த தமிழக அரசு மானிய விலையில் இயந்திரங்கள் வழங்க வேண்டும் என தைல உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மலை மாவட்டமான நீலகிரியில் கற்பூர மரத்தின் இலைகளைக் கொண்டு தைலம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. உலக அளவில் நீலகிரி தைலத்திற்கு அதிக வரவேற்பு கிடைந்துள்ளது. மருத்துவ குணம் கொண்ட இந்த தைலத்தை சுற்றுலா பயணிகள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.ஆனால் தற்போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மலிவான கற்பூர தைலத்தை நீலகிரி தைலத்துடன் கலந்து ஒரு சிலர் விற்பனை செய்வதால் நீலகிரி தைலத்தின் தன்மை சரிந்ததுடன் இதனை வாங்க யாரும் முன் வருவதில்லை. இதனால் இந்த தொழில் நலிவடைந்து வருவதால் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தைலத்தை தடுக்க வேண்டும் என தைல உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.