உதகையில் சாரல் மழை பெய்து வந்தாலும், சுற்றுலா பயணிகளின் வருகை குறையாததால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையால் நீலகிரி மாவட்டம் பெரும் சேதத்தை எதிர்கொண்டது. இதனால் 10 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாமல் உதகை, குன்னூர் உள்ளிட்ட இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. உதகை அருகே உள்ள பைகாரா அணையிலிருந்து நீர் வெளியேற்றப்படுவதால் பைகாரா அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்தநிலையில், இரண்டு நாட்களாக சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post