பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்ததால் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பண்டிகைகளின் போது மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில்களில் டிக்கெட் முன்பதிவு காலம் 120 நாட்களாக நீட்டிக்கபட்டது. இந்த நிலையில் ஜனவரி 10ம் தேதி பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு செல்ல விரும்புவோருக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கியது. இதனால், எழும்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முன் பதிவு செய்தனர். காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்கிய சிறிது நேரத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன. இதனால் பயணிகள் பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதனை தொடர்ந்து ஜனவரி 11ம்தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 13ம் தேதியும், ஜனவரி 12ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 14ம் தேதியும், ஜனவரி 13ம் தேதிக்கான முன்பதிவு செப்டம்பர் 15ம் தேதியும் தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு முந்தைய நாள் ஜனவரி 14-ம் தேதிக்கான முன்பதிவு செப்.16ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post