அமைப்புச் சாரா தொழிலாளர்களுக்கு மாதம் மூவாயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மத்திய இடைக்கால பட்ஜெட்டில், நாடு முழுவதும் உள்ள 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில், ஓய்வூதியத் திட்டம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் முதலீடு செய்யும் தொழிலாளர்களுக்கு 60 வயது நிறைவடையும்போது மாதம் 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
ரிக்க்ஷா தொழிலாளிகள், கட்டி தொழிலாளிகள், வீட்டு வேலை செய்பவர்கள், விவசாய தொழிலாளிகள், பீடி சுருட்டும் தொழிலாளிகள், நெசவாளர்கள் உட்பட ஏராளமானோர் பயனடைவர் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி பயனாளிகளுக்கு காப்பீட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
இதேபோல், நாட்டின் பிற பகுதிகளில் மத்திய அமைச்சர்கள், அந்தந்த மாநில முதல் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
Discussion about this post