கருணாநிதிக்கு கடலில் பேனா சிலை அமைப்பது தொடர்பான விவகாரத்தில் இராமேஸ்வரம் பாம்பனைச் சேர்ந்த நல்லதம்பி என்பவர் சிலை அமைப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். அதேபோல ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தங்கம் என்பவரும், நாகர்கோவிலைச் சேர்ந்த மோகன் என்பவரும் சிலை அமைப்பதற்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார்கள். மக்கள் நலனில் அக்கறை செலுத்தாமல் நிதி பற்றாக்குறை என்று சொல்லிக்கொண்டு 81கோடி ரூபாய் செலவில் பேனா சிலை அமைப்பது தேவைதானா என்று இன்றைக்கு திமுகவின் கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் பாலகிருஷ்னணும் கேள்வி எழுப்பி இருந்தார். இவ்வாறு தனது சொந்தக் கூட்டணி கட்சிக்காரர்களே சிலை விசயத்தில் எதிர்ப்புதான் காட்டுகிறார்கள். அப்படியென்றால் மீனவ மக்கள் மற்றும் சாதாரண பொதுமக்களும் கேட்காமலா இருப்பார்கள். இவ்வழக்குகள் அதிகார திமுகவினருக்கு சம்மட்டி அடிதான்.