மதன். பாவம் கேம் விளையாடியதற்கு இந்தப் பையனை தேடுகிறார்கள். கூடாதகுறைக்கு அவன் மனைவியி வேறு கைது செய்துவிட்டார்கள் என்ற தொனியில் சிலர் பேசுவதை கவனிக்க முடிகிறது. உண்மையில் கேம் விளையாடியது மட்டும்தான் பிரச்சினையா?
குழந்தைகளிடம் ஆபாசமாகப் பேசியது மட்டும் பிரச்சினை அல்ல. அப்படிப் பேசும்போது இசைந்துகொடுக்கும் குழந்தைகளுக்கு ஆபாச வீடியோக்களை விற்கும் வியாபாரம் இதன் பின்னணியில் உள்ளது என்பதுதான் மறைந்திருக்கும் அபாயம்.
இதற்கென இன்ஸ்டாகிராமில் பெருங்கூட்டம் இருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
பாபா-தப்பி ஓடவில்லை-ஓய்வெடுத்தார்-தாத்தா கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பார்-புது விளக்கம்
ஏன் இன்ஸ்டாகிராம்:
ஏராளமான பள்ளிக்குழந்தைகள் இன்ஸ்டாகிராமில்தான் குழு நடத்துகிறார்கள். காரணம் 13 வயதுக்கு மேல் இருந்தாலே இன்ஸ்டாகிராமில் அதிகாரப்பூர்வ கணக்கு தொடங்க அனுமதி உண்டு. இதனால், பள்ளிக்குழந்தைகள் தங்கள் சமூக வலைதள அங்கீகாரத்தின் அடையாளமாக இன்ஸ்டாகிராமைப் பார்க்கிறார்கள். இதனால், ஏராளமான குழந்தைகளை இன்ஸ்டாகிராமில் அவர்கள் கண்டுபிடிக்க முடியும்.
கண்டுபிடித்து என்ன செய்வார்கள்?
மெல்ல பேச்சுக்கொடுத்து உணர்வுகளைத் தூண்டுவது வழக்கமாக இருக்கிறதாம். இதற்கு இணங்கும் அல்லது பேச்சை வளர்க்கும் குழந்தைகளுக்கு தங்களிடம் இருக்கும் ஆபாச வீடியோக்களுக்கான விலைப்பட்டியலை அனுப்புவதும், ஒப்புக்கொண்டால் அவர்களிடம் டிஜிட்டல் க்யூ.ஆர். முறையில் பணம்பெற்றுக்கொண்டு வீடியோவை அனுப்புவதும் இந்த நெட்வொர்க்கின் வியாபாரம்.
விருது எங்களோடதுதான்! ஆனால் அதை நாங்க கொடுக்கல!!
இதில் மதனுக்கு தொடர்பு என்ன?
லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸில், இவர்களது குறிக்கு இலக்காகும் குழந்தைகளை கண்டுபிடிக்க இதுபோன்ற pedophile (குழந்தைகள் இச்சையைத் தூண்டும் விதமாக நடப்பவர்கள்) ஆட்கள் உதவுகிறார்கள். மதன் அப்படியாக இருந்ததாவே குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளான. தன் ஃபாலோயர்ஸில் இருந்து ஆட்களைத் தேர்ந்தெடுத்து, மதன் இதைத் தெரிந்தே செய்த குற்றவாளியா என்பதை விசாரணையில்தான் கண்டுபிடிக்க வேண்டும்
தெரியாமல்கூட நடக்குமா?
ஆம். நீங்கள் நிறைய ஃபாலோயர்களை கொண்டவர் என்றால், நீங்களும் இதற்கு இலக்காகலாம். உங்களுக்கே தெரியாமல் உங்கள் ஃபாலோயர்ஸை மற்றவர்கள் பார்க்க முடியும் என்பதால் இந்த ஆபத்து உண்டு.
எப்படித் தப்பிப்பது:
உங்கள் ஃபாலோயர்ஸை மற்றவர்கள் எளிதில் பார்க்க முடியாதபடி பிரைவசி செட்டிங்ஸ் மாற்றுங்கள். அவர்கள் உங்களைத்தான் பின்தொடர்கிறார்கள். அவர்களைப் பாதுகாப்பது உங்கள் கடமைதான்.
தனிப்பட்ட முறையில் புதிதாக வரும் மெசேஜ்களை, பெரும்பாலும் ஆதரிக்கவோ/ஏற்று பதிலளிக்கவோ வேண்டாம்.
சந்தேகத்துக்குரிய வகையில் இருந்தால் தயங்காமல் பெற்றோர்களிடம் சொல்லுங்கள். உங்கள் பெற்றோர்களும் இப்படி சம்பவங்களைக் கடந்து வந்திருப்பார்கள். அவர்களுக்குப் புரியும்.
தொழில்நுட்பம் இல்லையா? விஷ நித்தியும், விஷபாட்டில் மதனும் – ஒரு ஒப்பீடு
பெற்றோர்களும் குழந்தைகள் பேசுவதற்கான வெளியை ஏற்படுத்தி தாருங்கள்.
ஆரோக்கியமான, பேசுவதற்கு ஏற்ற குடும்ப சூழலே சிக்கல்களில் இருந்து தப்பிக்க முதல் வழி.
நேரடியாகச் சொல்வதானால், கேம் விளையடுபவர்கள் மட்டுமன்றி சமூக வலைதளங்களில் அதிகளவில் ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் அனைவருமே இவர்களின் இலக்குதான். விழிப்புணர்வும் எச்சரிக்கையாக இருப்பதுமே முறையான பாதுகாப்பு.
Discussion about this post