தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக, மணிலா எனப்படும் வேர்க்கடலை பயிர்கள் பசுமையாக வளர்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த எரும்பூண்டி கிராமத்தில், பெரும்பாலான விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டு, இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், போதிய மழை இல்லாத காரணத்தால் விளைச்சல் தாமதமானது. ஆனால், தற்போது பெய்து வரும் மழையால், மணிலா வளர்ச்சி அடைந்து பூ பூக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து, நல்ல மகசூல் கிடைக்கும் என்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post