தேர்தல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
2009ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட ப.சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட 3 ஆயிரத்து 354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ப.சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு சென்றது குறித்தும், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதா எனவும் ராஜகண்ணப்பன் தரப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை சிதம்பரம் மறுத்தார். குறுக்கு விசாரணை முடிவடையாததால் அடுத்த விசாரணையை மார்ச் 9ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Discussion about this post