பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு குடமுழுக்கு விழா, பக்தர்களின் விண்ணை முட்டும் அரோகரா முழக்கத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. கோபுர கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ் கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், குடமுழுக்கு விழா நடைபெற்றது. திருபுகழ், திருமுறைகள் ஒலிக்க, சிவாச்சாரியார்கள் ராஜகோபுரத்தில் உள்ள தங்க கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
தமிழில் வேதமந்திரங்கள் முழக்கவும், பக்தர்களின் எட்டுத்திக்கும் எதிரொலித்த
அரோகரா முழக்கத்திற்கு மத்தியில் குடமுழுக்கு விழா கோலாகலமாக நடைபெற்றது. குடமுழக்கு விழாவின்போது, கோபுர கலசங்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. பின்னர் 8 இடங்களில் பக்தர்கள் மீது நன்னீர் தெளிக்கப்பட்டது. 16 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குடமுழக்கு விழாவை, பழநி மலை அடிவாரத்தில் திரண்டிருந்த பக்தர்கள், எல்.இ.டி. திரையின் மூலம் கண்டு, பக்தி பரவசம் அடைந்தனர்.
கோயில் வளாகத்தில் 2 ஆயிரம் பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post