ஒரு டன் எடை கொண்ட காரை தலைமுடியால் கட்டி இழுத்து 8 வயது சிறுமி சாதனை புரிந்துள்ளார்.
பட்டுக்கோட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரது 8 வயது மகள் சம்யுத்தா. மூன்றாம் வகுப்பு படிக்கும் இவர், ஒரு டன் எடை கொண்ட காரை தனது தலைமுடியை கட்டி 112 மீட்டர் நீளத்திற்கு சென்று இழுத்து சாதனை படைத்துள்ளார். இந்த வயதுள்ளவர்கள் 60 மீட்டர் தூரம் இழுத்தாலே சாதனை ஆகும்.
ஆனால் சிறுமி சம்யுத்தா ஒரு நிமிடம் 45 நொடிக்குள் 112 மீட்டர் நீளத்திற்கு காரை இழுத்து ஆசியளவில் சாதனையை படைத்துள்ளார். இதற்காக சம்யுத்தாவிற்கு இந்திய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழும், ஆசிய புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சான்றிதழும் வழங்கப்பட்டது.
Discussion about this post