தென் இந்திய திரையுலகில் “துள்ளுவதோ இளமை” படத்தின் நடிகராக அறிமுகமான தனுஷ் இயக்குநராக, தயாரிப்பாளராக, பாடகராக, பாடல் ஆசிரியராகவும் ரசிகர் மத்தியில் இடம் பிடித்தார். இதனிடையே வட சென்னை படத்தை தொடர்ந்து மீண்டும் வெற்றி மாறனுடன் ‘அசுரன்’, துரை செந்தில்குமார், மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இயக்குநர்களின் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் தனுஷின் 36வது பிறந்தநாள் நேற்றைய தினம் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மேலும் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படத்தின் டைட்டில் மட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ஆகியவை வெளியிடப்பட்டது. பட்டாஸ் என பெயரிடப்பட்ட இப்படத்தில் மிகவும் இளைமையான தோற்றத்தில் இருப்பது போல போஸ்டர் வெளியாகியுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த படத்தில் கொடி படத்தையடுத்து இயக்குனர் துரை செந்தில்குமாருடன் தனுஷ் இரண்டாவது முறையாகவும், தொடரி படத்தை தயாரித்த சத்யஜோதி நிறுவனத்துடன் இரண்டாவது முறையாகவும் இணைந்துள்ளார். புதுப்பேட்டை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தனுஷூக்கு ஜோடியாக சிநேகா நடித்து உள்ளார். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.