திருநெல்வேலி மாநகராட்சி மன்ற கூட்டம் மேயர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. அப்போது திமுக கவுன்சிலர்கள் மேயர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மக்களுக்கான அனைத்து நலத்திட்ட பணிகளிலும் மேயர் கமிஷன் வாங்குவதாகவும், எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தருவதில்லை என்றும் குற்றம்சாட்டினர். ஒவ்வொரு பணியிலும் 25 சதவீதம் வரை கமிஷன் வாங்குவதாக திமுக கவுன்சிலர்களே, மேயர் மீது குற்றச்சாட்டை முன்வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆளும் திமுக அரசின் மேயர் மற்றும் அக்கட்சி நிர்வாகிகளிடையே நடந்த வாக்குவாதத்தை தடுக்க முடியாமல் விழி பிதுங்கி நின்ற ஆணையர், கைகலப்பு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக கூட்டத்தை அவசர அவசரமாக முடித்து வைத்தார்.
Discussion about this post