திருச்சியில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில், அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டு மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
திருச்சி காஜா பேட்டையில் நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாமில் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டனர். குடிநீர் வடிகால், பாதாள சாக்கடை, வீட்டுவரி, முதியோர் உதவித்தொகை போன்றவை தொடர்பான மனுக்களை மக்களிடமிருந்து அமைச்சர்கள் பெற்றுக் கொண்டனர். இம்மனுக்கள் மீது அரசின் விதிமுறைக்குட்பட்டு தகுதியின் அடிப்படையில் 30 நாட்களுக்குள் தீர்வுகாணப்படும் என அமைச்சர்கள் உறுதி அளித்தனர்.
Discussion about this post