நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர், நாளை மறுதினம் துவங்க உள்ளதை அடுத்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 2வது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல் நாடாளுமன்ற கூட்டம், கடந்த ஜுன் மாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில், நாடாளுமன்றத்தின் 2வது கூட்டத் தொடர், நாளை மறுநாள் துவங்கி, டிசம்பர் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த குளிர்கால கூட்டத் தொடருக்கு முன்னதாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு, சபாநாயகர் ஓம் பிர்லா, இன்று அழைப்பு விடுத்து உள்ளார்.
இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தலைமையில், மற்றொரு அனைத்துக் கட்சிக் கூட்டம், நாளை டெல்லியில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற கூட்டத் தொடரில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரி சலுகை வழங்கும் மசோதா நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
Discussion about this post