இலங்கையின் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளதாக, ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
இலங்கையில், ஈஸ்டர் தினத்தன்று, மூன்று தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என, ஒன்பது இடங்களில் குண்டுகள் வெடித்ததில், 258 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக, இந்தியா முன்னதாகவே உளவு தகவல் கொடுத்தும், பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கவில்லை என அந்நாட்டு எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. குண்டு வெடிப்பு சம்பவத்தை, உளவு அமைப்பின் தோல்வியாக பார்க்கக் கூடாது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கூறினார். குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, நாடாளுமன்ற நிலைக் குழு விசாரித்து வருவதாகவும், தான் நேரில் ஆஜராகி அரசிடம் உள்ள அனைத்து தகவல்களையும் அளிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்..
Discussion about this post