சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே. பி. முனுசாமி, நத்தம் விஸ்வயாதன், வைத்தியலிங்கம் உள்ளிட்டோர் விருப்ப மனுக்களை பரிசீலனை செய்து வருகின்றனர்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், ஒத்த கருத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
Discussion about this post