நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெறும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக, இந்த வருடத்திற்கான கூட்டத்தொடர் எப்போது நடைபெறும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிச்சயம் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோசி தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரை நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.