31 மசோதாக்கள் : மழைக்கால கூட்டத்தொடர் இன்று முதல் தொடங்குகிறது… எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்றுதொடங்கவுள்ள நிலையில், பெட்ரோல்-டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தொடரில், 17 புதிய மசோதாக்கள் உள்பட 31 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி, நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில், நாடாளுமன்ற விதிகளுக்கு உட்பட்டு முக்கிய பிரச்னைகள் குறித்து ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த தயார் என பிரதமர் மோடி உறுதியளித்ததாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு, தேச துரோக சட்டம், விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Exit mobile version