ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவதன் மூலம் தேர்தல் செலவை கணிசமாக மிச்சப்படுத்த முடியும் என்று மத்திய பாஜக அரசு வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மே 16ஆம் தேதி மத்திய சட்ட ஆணையத்துடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டது. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு, இதர தேவைகளான கூடுதல் காவல் படை, தேர்தல் அதிகாரிகள் நியமனம், வாக்கு இயந்திரங்கள் பற்றி தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்து வருகிறது. சில மாநிலங்களின் சட்டப்பேரவை ஆயுட்காலத்தை குறைக்கவும், அதிகரிக்கவும் வேண்டி உள்ளதால், உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியது அவசியம் என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற நிலையில் உரிய சட்ட திருத்தங்கள் செய்யாத வரை ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
Discussion about this post