திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் வெளியாக உள்ள “ பரமபதம் விளையாட்டு ” திரைப்படத்திற்கு யூ சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்துள்ளனர்.
திரைத்துறைக்கு வந்து 20 வருடங்கள் ஆகியும் த்ரிஷா தனக்கென ஒரு அசையா அடையாளத்தையும், ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டுள்ளார் .இவருக்கு பெயர் சொல்லும் படமாக மெளனம் பேசியது, கில்லி ,விண்ணைதாண்டி வருவாயா, 96 , இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதனிடையே ஜனவரியில் வெளியான ‘பேட்ட’ படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடியாக இணைந்த த்ரிஷாவுக்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது திருஞானம் இயக்கத்தில் வெளியாக உள்ள “ பரமபதம் விளையாட்டு ” திரைப்படத்தில் த்ரிஷா மருத்துவராகவும், ஒரு குழந்தைக்கு தாயாகவும் நடித்துள்ளார் .இது ஒரு அரசியல் கலந்த திர்ல்லர் கதைக் களம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தில் சர்ச்சை காட்சிகள் இருப்பதை சுட்டி காட்டி யூ சான்றிதழ் அளிக்க தணிக்கை குழு மறுத்து ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் நடிகை திர்ஷா கர்ஜனை, சதுரங்க வேட்டை-2 போன்ற 7 படங்களை கைவசமாக வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post