சென்னையை அடுத்த தாம்பரத்தில், முற்றிலும் இயற்கை சூழலில் அமைந்து காண்போரை பரவசப்படுத்துகிறது பல்லவா ஓவியர் கிராமம். சென்னை தாம்பரத்தை அடுத்த சிறுமாத்தூர் பகுதியில் அமைந்துள்ளது பல்லவா ஓவியர் கிராமம். வாகனங்களின் இரைச்சல் இல்லாமல், கக்கை, கிளி, சிட்டுகுருவிகள் போன்ற பறவைகளின் ஓசையுடன் சுற்றிலும் மரங்கள், புல்வெளிகள் அடங்கிய அழகிய சூழலை தருகிறது இந்த கிராமம்.
இங்கு, 20க்கு மேற்பட்ட ஓவியர்கள் இயற்கையோடு ஒன்றி தங்கள் வாழ்விடத்தை அமைத்து ஓவியங்களை படைத்து வருகின்றனர். பெயருக்கு ஏற்ப பல்லவர் காலத்து ஓவியங்களின் பிரதிபளிப்பு இந்த கிராமத்தில் விரவுயுள்ளது. இங்கு வசிக்கும் ஓவியர்கள் தங்கள் வீட்டை இயற்கைக்கு ஒத்துப் போகும் வகையில் அமைத்துள்ளார்.
வீட்டைச் சுற்றி மரங்கள், அடர் செடிகள், வண்ண பூக்களின் செடிகள், ஆங்காங்கே சிறு குட்டைகள் போல் அமைத்து இயற்கை பாதுகாப்புக்கு எடுத்துகாட்டாய் வாழ்ந்து வருகின்றனர்.
Discussion about this post