பழநியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை சிறப்புற நடைபெற்றது. தமிழ்க் கடவுள் முருகனின் மூன்றாம் படைவீடான பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலைச் சேர்ந்த உபக் கோயிலான பெரிய நாயகியம்மன் கோயிலில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி கொடியேற்றஹ்துடன் தைப்பூசம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. விழாவில் தினமும் சிறப்பு நிகழ்ச்சிகள் பலவை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று முன் தினம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணியளவில் வள்ளி, தெய்வானை சமேத முத்துகுமார சுவ்வமி மணக்கோலத்தில் வெள்ளித் தேரில் வீதி உலா வந்தார்.
மேலும் திருவிழாவின் மிக முக்கியமான தைப்பூசத் தேரோட்டம் நேற்று மாலை கோலகலமாக நடைபெற்றது. மேலும் விரதம் இருந்து மாலை அணிந்து பாதயாத்திரையாக வந்த முருக பக்தர்கள் தேரில் வலம் வந்த வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமியை தரிசனம் செய்தார்கள். தேர் நிலையை அடைந்தௌடன் சுவாமி தேர்க்கால் பார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் பிப்ரவரி 7ஆம் தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியும், அன்று இரவு 11 மணிக்கு கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Discussion about this post