பழனி முருகர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடி கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு, இன்று கோயில் கொடிக்கு பூஜை செய்யப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. பத்து நாட்கள் நடைபெறும், விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாளான 21ம் தேதி நடைபெறுகிறது.
24ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவரப்பட்டு அபிஷேகம் செய்யப்பட்டது.
Discussion about this post