பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரஃப் மீதான தேச துரோக வழக்கு விசாரணை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2007ஆம் ஆண்டு பாகிஸ்தானில் தவறான முறையில், அவசர நிலை பிரகடனம் செய்ததற்காக அப்போது அதிபராக இருந்த பர்வேஷ் முஷரஃப் மீது அந்நாட்டு அரசு தேசதுரோக வழக்கு பதிவு செய்தது. இதன் மீதான வழக்கு 3 உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய நடுவர் மன்றம் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்த முஷரஃப், 2016ஆம் ஆண்டு மருத்துவ சிகிச்சைக்காக துபாய் சென்றார். இதுவரை அவர் நாடு திரும்பாத நிலையில், இந்த வழக்கு பாகிஸ்தான் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முஷரஃப் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ரம்ஜான் பண்டிகை முடியும் வரை அதாவது, ஜூன் 4 வரை, தன் மீதான தேசத்துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என முஷரஃப் கேட்டுக் கொண்டதாகவும், அதே சமயம் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததற்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Discussion about this post