இந்தியாவால் தெற்காசியாவின் அமைதி குலையும் என பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியா, ரஷியாவிடம் இருந்து எஸ்-400 ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இந்தியா-ரஷ்யா இடையே கையெழுத்தாகியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. எஸ்-400 ஏவுகணைகள் வாங்கும் இந்தியாவின் முடிவு மீண்டும் ஆயுதப் போட்டியை உருவாக்கும் என பாகிஸ்தான் கூறியுள்ளது.
1998 ஆம் ஆண்டு இந்தியா, பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடத்தியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தானும் பின்னர் அணு ஆயுத சோதனை நடத்தியது.
இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்துள்ள பாகிஸ்தான், இருநாடுகளும் நடத்திய அணுகுண்டு சோதனையால் ஏற்பட்ட பதற்றம் ஓய்ந்த நிலையில், தற்போது எஸ்-400 ஏவுகணைகள் வாங்குவது பதற்றத்தை அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.