உலககோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா- பாகிஸ்தான் போட்டியின் லீக் ஆட்டம் மான்செஸ்டரில் தொடங்கியது. வரலாற்று வெற்றியை தொடர இந்திய அணியும், தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க பாகிஸ்தானும் இன்றைய போட்டியில் களமிறங்கி ஆடி வருகின்றன.
இந்நிலையில், போட்டி தொடங்குவதற்கு முன், அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பாகிஸ்தான் அணிக்கு அறிவுரை வழங்கியிருந்தார். “பாகிஸ்தான் டாஸ் வென்றால் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும்” என்று அவர் ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் பாகிஸ்தான் அணி டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டது. பாகிஸ்தான் அணிக்கு 1992ஆம் ஆண்டு உலககோப்பையை பெற்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இந்த பேச்சை பாகிஸ்தான் அணி புறக்கணித்தது அந்நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட இம்ரான் கான், “கடந்த கால தோல்விகளை மறந்து மனதை ஒருநிலைப்படுத்தி வீரர்கள் விளையாட வேண்டும் வீரர்களுக்கு எனது வாழ்த்துக்கள் ” என்று கூறியுள்ளார்.
Discussion about this post