2 இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், 2 இந்திய வீரர்களை கைது செய்துள்ளதாகவும் வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தான் ராணுவ தளபதி, ஆசிப் கபூர், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இரண்டு இந்திய போர் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும், இந்திய விமானப்படை கமாண்டர் அபினந்தன் உட்பட 2 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் உண்மைத் தன்மை பற்றி இந்தியா தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அதேவேளையில், விமானப் படை கமாண்டர் அபினந்தன் திரும்பவில்லை என்பதை இந்தியா தரப்பில் உறுதி செய்யப்பட்டு, தகவல் வெளியாகியுள்ளதாகவும், ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post