ஜம்மு காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய அத்துமீறிய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். ரஜோரி மாவட்டத்தின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியான சுந்தர்பானியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். மோட்டார்கள் ரக ஆயுதங்கள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 24 வயதான இந்திய ராணுவ வீரர் யாஷ் பால் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஜனவரியில் இருந்து தற்போது வரை பாகிஸ்தான் ராணுவத்தினர், எல்லையில் 110 முறை இத்தகைய தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதனிடையே, ஜம்மு காஷ்மீரின் சோப்பூர் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் இரண்டு போலீசார் காயமடைந்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் முழு சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
Discussion about this post