ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் தாக்குதலையடுத்து, ஜம்மு காஷ்மீரின் எல்லை மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதிகளில் கடந்த 14ம் தேதியிலிருந்து பதற்றம் நிலவிவருகிறது. சில தினங்களாக பாகிஸ்தான் ராணுவத்தினரின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் எல்லைக்கட்டுப்பாட்டு கோட்டு பகுதியான உரியில் செயல்பட்டு வரும் குவஹாலன், சோக்காஸ், கிக்கர் மற்றும் கதி ஆகிய நான்கு நிலைகளில் நேற்றிரவு பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டனர். மேலும் கமல்கோட் பகுதியில் உள்ள கிராமங்களிலும் அவர்களின் தாக்குதல் தொடர்ந்தது.
இரவு முழுவதும் நீடித்த இந்த தாக்குதலுக்கு இந்திய தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது. இந்த தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
Discussion about this post