பாகிஸ்தான் வாட்ஸ் அப் குழுக்களில் இணைந்து செயல்பட்டு வந்த வங்கதேச நபரை கோவை காவல்துறையினர் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவையில் தங்க நகைபட்டறையில் வேலை பார்த்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்தவர் பாரூக் கௌசீர். கடந்த சில நாட்களுக்கு முன் தன்னுடைய செல்போனை பழுது பார்க்க கொடுத்துள்ளார். அப்போது அந்த செல்போனில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வாட்ஸ் அப் குழு ஒன்றில் பாருக் தொடர்பில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த கடைக்காரர், இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக பாரூக் கௌசீரை கைது செய்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், பாகிஸ்தான் முஜாகிதின் என்ற வாட்ஸ் அப் குழுவில் பாரூக் கௌசீர் பலரிடம் தொடர்பில் இருந்ததும், அவர்களிடம் துப்பாக்கி தொடர்பான தகவல்களை பரிமாறி இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரிடம் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகள் இருப்பது, குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், கோவையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதிதிட்டம் தீட்டியுள்ளதாக, மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post