பாகிஸ்தான் மக்கள் காஷ்மீருக்குச் செல்ல வேண்டாம் என அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 370ஆவது சட்டப்பிரிவை ரத்து செய்ததைத் திரும்பப்பெறாவிட்டால் இந்தியாவுடன் பேச்சு நடத்தப் போவதில்லை எனக் கூறியுள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினையை எடுத்துரைக்கப் போவதாகவும், பாகிஸ்தானில் இருந்து யாராவது காஷ்மீருக்குச் சென்றால், காஷ்மீர் மக்களுக்கு அநீதி இழைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், காஷ்மீர் மக்களின் எதிரியாகவும் தான் கருதப்பட வாய்ப்பிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Discussion about this post