கொரொனா பாதிப்பில் உள்ள சீனாவில் இருந்து தனது நாட்டு மக்களை மீட்காத பாகிஸ்தானின் செயல், பாகிஸ்தான் மக்களுக்கும் உலகிற்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சீனாவுக்கு பாகிஸ்தான் அடங்கிப் போவது ஏன்? – விரிவாக விளக்குகிறது இந்தத் தொகுப்பு.
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக உள்ள ஒரே வல்லரசு நாடாக சீனா உள்ளது. காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரத்தில், ஐநாவில் பாகிஸ்தானின் நிலைப்பாட்டை சீனா மட்டுமே ஆதரித்தது.
பாகிஸ்தானுக்கு அதிகக் கடன் அளிக்கும் நாடாகவும் சீனா உள்ளது. இதனால் சீனாவிடம் பாகிஸ்தான் பெட்டிப் பாம்பாக அடங்கி நடக்கின்றது. பாகிஸ்தான் பெண்களை சீனாவைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய விவகாரத்திலும், லட்சக் கணக்கான வீகர் இசுலாமியர்களை சீனா சிறைகளில் அடைத்து கொடுமைப்படுத்தும் விவகாரத்திலும் பாகிஸ்தான் மவுனமாகவே இருந்து வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக, சீனாவில் சிக்கி உள்ள பாகிஸ்தான் மக்களை மீட்பதிலும் பாகிஸ்தான் அரசு தவறி உள்ளது. சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சீனாவில் உள்ள தங்கள் நாட்டின் மாணவர்களையும் மக்களையும் விமானங்கள் அனுப்பி மீட்டுவரும் நிலையில், பாகிஸ்தான் அரசு இதுவரை யாரையும் மீட்கவில்லை.
மேலும், சீனாவில் கொரானோ வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளில் தங்கி இருக்கும் 800 பாகிஸ்தான் மாணவர்களை திரும்ப அழைக்க மாட்டோம் – என பாகிஸ்தான் அதிகாரிகள் வெளிப்படையாகவே கூறி விட்டனர்.
பாகிஸ்தான் பிரதமரின் நேரடி சிறப்பு சுகாதார ஆலோசகர் சபீர் மிஸ்ரா, ’சீனாவுடன் தோளோடுதோள்கொடுத்து எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். கொரோனா வைரசை சீன அரசு வுகான் நகரத்திற்குள்ளேயே கட்டுப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்த சீன அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் போதுமான அளவில் உள்ளன’. என்று கூறி உள்ளார். பாகிஸ்தானின் இந்த நிலைப்பாடு அந்நாட்டு மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் அரசு எந்த மீட்புப் மேற்கொள்ளாததற்கு பாகிஸ்தான் மக்களும், உலக மக்களும் சமூக வலைத்தளங்களில் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post