இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
ஜம்மு- காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பாகிஸ்தான் எதிர்ப்புகளை வெளிப்படுத்தி வருகிறது. இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இறுதியில் பாகிஸ்தானுக்கு மற்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை. இதுகுறித்து, பல்வேறு தலைவர்களிடம் பாகிஸ்தான் முறையிட்டபோதும், இருதரப்புக்குள் முடித்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
பயங்கரவாதம் மற்றும் வன்முறைகள் அற்ற சூழலில் பாகிஸ்தானுடன் நிலுவையில் உள்ள பிரச்னைகள் குறித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா விரும்புகிறது என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், இந்தியாவுடன் நிபந்தனைகளுடன் கூடிய பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
Discussion about this post