எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்தது. காஷ்மீர் மாநிலம் ரஜோரி அருகே மாலை ஆறரை மணி அளவில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தின. இதையடுத்து இந்திய படைகள் பதில் தாக்குதலை நடத்தின.இதனால் எல்லைக் கோட்டருகே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டபடி இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலை இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கலோனல் தேவேந்தர் ஆனந்த் உறுதிப்படுத்தியுள்ளார்.
நவ்ஷேரா பகுதியில் கலால் எனுமிடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் படைகள் பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றும் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்கியது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post