பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. இவர் இஸ்லாம் மதத்தை இழிவுப்படுத்தி பேசியதாக இவர் மீது மத நிந்தனை புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
கீழமை நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கில் ஆசியா பீபிக்கு 2010-ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆசியா பீபி 2015-ஆம் ஆண்டு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இதனை விசாரித்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆசியா பீவியை கடந்த ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி விடுதலை செய்தது.
மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டனர்.
ஆசியா பீபி விடுதலை செய்யப்படதற்கு எதிர்ப்பு தெரிவித்து காரி முஹம்மது சலாம் என்பவர் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ஆசிப் சயீத் கோசா தலைமையிலான அமர்வு இன்று இம்மனுவை தள்ளுபடி செய்தது.
Discussion about this post