ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது, இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும், இதில், பாக்கிஸ்தான் அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை மாற்றி கொள்ள வேண்டும் என பாகிஸ்தானுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது.
இந்தியா உடனான அனைத்து வணிகத்திற்கும் தடை, இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் மற்றும் பாகிஸ்தானுக்கான இந்திய துணைத் தூதர் வெளியேற்றப்படுவார் என பாகிஸ்தான் அரசின் பாதுகாப்பு குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இரு நாட்டு வெளியுறவு கொள்கையில் பாகிஸ்தான் எடுத்த தவறான முன் உதாரணம் எனவும், சர்வதேச நாடுகளின் கவனத்தை பெறவே பாகிஸ்தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் பாகிஸ்தானிடம் இருந்து எதிர்பார்க்கப்பட்டவை என்பதால் இதில் ஆச்சர்யபடுவதற்கு ஒன்றுமில்லை என இந்தியா தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மக்களின் சமூக, பொருளாதார ஏற்ற தாழ்வுகளை நீக்கவும், புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தவுதற்காகவே சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டுள்ளதாக இந்தியா பதிலளித்துள்ளது. இந்தியாவின் முடிவை எப்படி எதிர்த்தால் தக்க பதிலடி கொடுக்கவும், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் இந்திய அரசு தயாராக உள்ளதாக பாகிஸ்தான் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தியா தெரிவித்துள்ளது.
Discussion about this post