லடாக்கை ஒட்டிய பகுதியில் போர் விமானங்களை பாகிஸ்தான் குவித்து வருவதால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிந்துள்ளன. சர்வதேச அளவில் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்காத நிலையில், எல்லைப் பகுதியில் அசாதாரண சூழலை பாகிஸ்தான் ஏற்படுத்தி வருகிறது. லடாக்கை ஒட்டி பகுதியில் அந்நாட்டு விமானப் படைக்குச் சொந்தமான மூன்று சி-130 ரக விமானங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஆயுதத் தளவாடங்களையும் பாகிஸ்தான் கொண்டு வந்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம் கூர்ந்து கவனித்து வருகிறது. ஸ்கார்டு விமானப்படை தளத்துக்கு நகர்த்தப்படும் தளவாடங்கள் போர் விமானங்களுக்கு தேவையான உபகரணங்களாக இருக்கலாம் என்று இந்திய ராணுவ தரப்பில் கூறப்படுகிறது. அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ஜே 17 ரக விமானங்களும் கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
Discussion about this post