காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் யூரி பகுதியில், இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.
காஷ்மீரில் கடந்த சில நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் எல்லை அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் யூரி பகுதியில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இந்திய ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் எல்லை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தியாவின் பதிலடியை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் வீரர்கள் பின் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Discussion about this post