சென்னை திரு.வி.க நகரில் மது போதையின் போது ஏற்பட்ட தகராறில், பெயிண்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கொளத்தூர் பகுதியில், பெயிண்டர் வேலை செய்து வரும் சுரேஷ்குமார் என்பவர், குடி போதையில் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளார். இதனையடுத்து, காயம்பட்டவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சத்யா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் கத்தியால் சுரேஷை காலில் வெட்டியதாகவும், அதில் அதிக அளவு இரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்தது.
Discussion about this post