கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனை 3 கோடியே 30 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.
திருவாங்கூரை ஆண்ட இறவி வர்மா குலசேகரபெருமாள் என்ற மன்னரால் கி.பி. 1601 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அரண்மனைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கேரள மாநில அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த அரண்மனை புதுப்பிக்கும் பணி கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதற்காக 3 கோடியே 30 லட்சம் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றன. மேலும், 200 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட மணிக்கூண்டு கடிகாரம் உள்ளிட்டவைகள் சீரமைக்கப்பட்டன. கேரள தொல்லியல் துறை அமைச்சர் கடனப்பள்ளி ராமசந்திரன், இந்த அரண்மனையை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அரண்மனை நிர்வாகிகள், பள்ளி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post