பல்வேறு துறைகளில் சாதித்த 106 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மத்திய அரசு அரசியல், கலை, விளையாட்டு, சமூக சேவை போன்றவற்றில் சிறந்து விளங்கிய நபர்களுக்கு பத்ம விருதுகளை அறிவித்து வருகிறது. இந்த ஆண்டு பத்ம விருதுகள் 106 பேருக்கு வழங்க உள்ளது. அதனை ஒட்டி மத்திய அரசு 2023ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வாங்க உள்ளவர்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

சமாஜ்வாதி கட்சியின் தலைவர் மறைந்த முலாயம்சிங் யாதவ், கர்நாடகா முன்னாள் முதல்வர் மறைந்த எஸ்.எம். கிருஷ்ணா உட்பட ஆறு பேருக்கு பத்ம விபூசன் விருது அறிவிக்கப் பட்டுள்ளது. அதேபோல மறைந்த மகாராஷ்டிரா தொழிலதிபர் குமார்மங்கல பிர்லா, தமிழகத்தைச் சேர்ந்த பாடகி வாணி ஜெயராம், கன்னட எழுத்தாளர் எஸ்.என். பைரப்பா உட்பட ஒன்பது பேருக்கு பத்ம பூசன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் கல்யாண சுந்தரம் மற்றும் பழங்குடியின இருளர் சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பாம்புபிடி வீரர்கள் உட்பட மொத்தம் 91 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version