சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ப. சிதம்பரம் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார் என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி நீதிமன்றக் காவலில் உள்ளார். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சிதம்பரத்தை கைது செய்வதை அமலாக்கத்துறை வேண்டுமென்ற தாமதம் செய்வதாக அவரது சார்பில் வாதாடி வரும் வழக்கறிஞர் கபில் சிபல் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை ப.சிதம்பரம் உரிய நேரத்தில் கைது செய்யப்படுவார் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ முன்பு ஆஜராக விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post