மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்னும் பட்சத்தில் புதிதாக உருவான வேலை வாய்ப்புகள் எங்கே என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பண மதிப்பு இழப்பு நடவடிக்கை என்பது அடிமுட்டாள்தனமானது என்றார். காங்கிரஸ் ஆட்சியைவிடவும் பா.ஜ.க ஆட்சியில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கிறது என்னும் பட்சத்தில் 6 சதவீதம் வரை ஏன் முதலீடு குறைந்துள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில் ஏற்றுமதி 315 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியதை சுட்டிக் காட்டிய ப.சிதம்பரம், இதனை பா.ஜ.க ஆட்சியில் ஏன் முறியடிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேசமயம் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி அடைந்திருக்கும் போது அதிகளவில் விவசாயிகள் ஏன் தற்கொலை செய்து வருகின்றனர் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Discussion about this post