தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஏப்ரல் 4ம் தேதிவரை ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ம் தேதிவரை ஆயிரத்து 6 நூற்றி 18 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கம், நகைகள் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகப்பட்சமாக குஜராத்தில் 511 கோடியும் தமிழகத்தில் 286 கோடியும் ஆந்திராவில் 158 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது. தமிழகத்தை பொருத்தவரை 137 கோடியே 81 லட்சம் ரூபாய் மதிப்பிலான ரொக்கமும் 141 கோடியே 14 லட்சம் மதிப்பிலான நகைகளும் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளன.
Discussion about this post