மக்களவைத் தேர்தலுக்காக தமிழகத்தில் 1600-க்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. நேற்று காலை 11 மணிக்கு வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதில் பெரும்பாலான வேட்புமனுக்கள் எவ்வித பிரச்சனையும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன. கடலூர் அமமுக வேட்பாளர் உட்பட சிலரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கபட்டன. இதனிடையே ஏற்கப்பட்ட வேட்புமனுக்கள் பற்றிய விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பு மனுக்களை வாபஸ் பெற வெள்ளிக் கிழமை கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதன் பிறகே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் 1255 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதிக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்துள்ளார்.
Discussion about this post