ஹிண்டன்பர்க் என்கிற அமெரிக்க தடவியல் மற்றும் நிதிநிலை ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி அதானி குழுமத்திற்கு எதிராக 88பக்கங்கள் உடைய அறிக்கையினை சமர்பித்திருந்தது. இதனால் இரண்டே தினங்களின் அதானி குழுமத்தின் பங்குகள் 2.47 லட்சம் கோடி சரிவினைக் கண்டு உலகப் பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருந்தவர் ஏழாம் இடத்திற்கு தள்ளப் பட்டிருந்தார். மேலும் இதன் விளைவாக இவரது சொத்து மதிப்பு ரூபாய் 2.9 லட்சம் கோடி சரிவினைக் கண்டுள்ளது.
அவரது இப்போதைய சொத்துமதிப்பு ரூபாய் 6.9 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் புளூம்பெர்க் நிறுவனத்தின் உலகின் முதல் பத்து கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து கெளதம் அதானி வெளியேறி தற்போது பதினொன்றாவது இடத்திற்கு சென்றுள்ளார். எனினும், இந்தியாவைப் பொறுத்தவரை இன்னும் இந்தியாவின் முதல் பணக்காரராகவே நீடிக்கிறார். மேலும் இவருக்கு அடுத்தபடியாக முகேஷ் அம்பானி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
Discussion about this post