தெருவோரம் உள்ள ஆதரவற்ற நாய்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடைபெற்றது.
விலங்குகள் நல அமைப்பான புளூ கிராஸ் உடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆர்வமுடன் செல்ல பிராணிகளை தேர்வு செய்துகொண்டு சென்றனர். நாய் மற்றும் பூனையினை தத்தெடுக்கும் இந்த நிகழ்ச்சியில் குழந்தைகளை போல் வளர்த்த தங்களது செல்ல பிராணிகளையும் மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ந்தனர். இங்கு இருந்து கொண்டு செல்லப்படும் செல்ல பிராணிகள் மூலம், வீட்டில் ஒரு குழந்தை உருவானது போல மன மகிழ்ச்சி கிடைக்கும் என்று பிராணிகளை தத்தெடுத்தவர்கள் கூறினர்.
Discussion about this post