கொடைக்கானலில் வருடத்திற்கு ஒரு முறை மட்டும் பூக்கும் ஆர்னமெண்டல் செர்ரி மலர், சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. மலைகளின் இளவரசி கொடைக்கானலில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. குளிர்காலத்தை வரவேற்கும் விதமாக ஆர்னமெண்டல் செர்ரி மலர், பிரையண்ட் பூங்காவில் பிங்க் வண்ணத்தில் பூத்து குலுங்குகிறது. ஆண்டு முழுவதும் இலைகளை மட்டுமே கொண்டிருக்கும் இந்த மரத்தில், டிசம்பர் மாதம் மலர் மொட்டுக்கள் உருவாகி மரத்தின் அனைத்து இலைகளையும் உதிர்க்க துவங்கும்.
ஜனவரி மாத துவக்கத்தில் அனைத்து மொட்டுகளும் ஒரே நேரத்தில் மலர்ந்து, மரம் முழுவதும் பிங்க் நிறமாக மாறி, காண்பவர் மனதைக் கொள்ளைக் கொள்ளும். தற்போது பூங்காவில் வேறு மலர்கள் இல்லாத நிலையில், ஆர்னமெண்டல் செர்ரி மலர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
Discussion about this post