கொரோனா பரவலை தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டுமென ஒடிசா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசாவில் 21 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அம்மாநில அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. தும்மல், இருமல் ஆகியவற்றின் மூலம் அருகில் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு இருப்பதால், முகத்தை இரண்டு லேயர்கள் கொண்ட முகக் கவசத்தால் மறைத்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒருவேளை முகக்கவசம் இல்லாவிட்டாலும் கூட கைக்குட்டை அல்லது அடர்த்தியான வேறு துணிகளையோ கொண்டு நிச்சயமாக மூக்கு, வாய் ஆகியவற்றை மறைத்து கொள்ள வேண்டுமென ஒடிசா மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post