திருவள்ளூர் மாவட்டத்தில் பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என ஆட்சியர் மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி மாவட்டத்தில் 2 வயது சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஆட்சியர் மகேஸ்வரி, ஆழ்துளை கிணறுகள் மூடாமல் இருப்பதை கண்டறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். இதுவரை மூடப்படாத ஆயிரத்து 100 ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டிருப்பதாகவும் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார். ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் இருப்பது குறித்து 24 மணிநேரமும் செயல்படும் வாட்ஸ்அப் எண் – 9444317862 மற்றும் தொலைபேசி எண் 044-27664177 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம் என்று அவர் கூறினார்.
Discussion about this post